ரஷ்யா : 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

Estimated read time 0 min read

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கம்சட்காவில் சில பகுதிகளில் 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

கடந்த ஜூலை மாதத்தில் இதே பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author