சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 4ஆம் நாள் பெய்ஜிங்கில் பாகிஸ்தான் துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தாருடன் 7ஆவது சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், பாகிஸ்தானுடன் இணைந்து இரு நாட்டு தலைவர்களின் பொது கருத்துக்களைக் கூட்டாக நடைமுறைப்படுத்தி மேலும் நெருக்கமான சீன-பாகிஸ்தான் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்தச் சீனா விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஐ.நா சாசனத்தை உறுதியாகப் பேணிகாக்கச் சீனா விரும்புவதாகவும் அவர் கூறினார்.
சீனாவின் நவீனமயமாக்கல் பாதை உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிகாப்பதற்கான முக்கிய சக்திகளில் ஒன்றாகும். ஒரே சீனா எனும் கொள்கையை பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தி சீனாவின் மைய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் சீனாவுக்கு உறுதியாக ஆதரவளிக்கும் என்று தார் கூறினார்.
