சீன விண்வெளி வீரர்களுக்கான மலைக் குகைப் பயிற்சி சமீபத்தில் சொங்சிங் மாநகரில் நிறைவடைந்துள்ளது. ஒரு மாத காலம் நடைபெற்ற இப்பியற்சியில், 4 குழுகளாகச் சேர்க்கப்பட்டுள்ள 28 விண்வெளி வீரர்கள் கலந்துகொண்டனர். சுற்றுச் சூழல் கண்காணிப்பு, குகை அளவீடு மற்றும் வரைபடம், பூமி மற்றும் விண்வெளிக்குமிடையில் தொடர்புப் பயிற்சி, விண்வெளி வீரர்களின் மன நிலை பயிற்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றன.
குகையின் சுற்றுச் சூழல் குறிப்பிட்ட அளவில் விண்வெளி தீவிரமான சூழலுக்கு ஒத்த நிலையில் உள்ளது. தடைக்காப்பு, தனிமை, உயர் அபாயம் போன்றவற்றில் இவை ஒத்த தனிச்சிறப்புக்களை கொள்கின்றன. விண்வெளி வீரர்கள், விண் கலத்தில் நீண்டகாலம் தங்கியிருந்து பணிகளை நிறைவேற்றி நிலவுக்கு மனிதரை ஏற்றிச்செல்லும் பயணத்திட்டத்தை நனவாக்குவதற்கு வலிமையான ஆதரவை இப்பயிற்சி வழங்கியுள்ளது.
