சீனாவின் பசுமையான நுகர்வுச் சந்தையின் அளவு விரிவாக்கம்

Estimated read time 1 min read

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜனவரி 6ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், பசுமையான நுகர்வை முன்னேற்றுவதற்கான நிலைமை குறித்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனத் துணை வணிக அமைச்சர் ஷெங் ஜியூபிங் இக்கூட்டத்தில் கூறுகையில், பழைய பொருட்களுக்கு சலுகையுடன் புதிய பொருட்கள் விற்பனை கொள்கை, பசுமையான நுகர்வை முன்னேற்றுவதற்கான முக்கிய வாய்ப்பாக வைக்கப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025ஆம் ஆண்டு, பழைய பொருட்களுக்கு சலுகையுடன் புதிய பொருட்கள் விற்பனை கொள்கையின் மூலம் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடியே 83 லட்சத்தை எட்டியது. இதில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 60 விழுக்காடை வகித்துள்ளது. இந்தக் கொள்ளையின் மூலம், நுகர்வுப் பொருட்களின் விற்பனை தொகை 3 லட்சத்து 92 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. 49.4 கோடி நுகர்வோர் இதன் மூலம் நன்மை அடைந்துள்ளனர் என்றார்.

மேலும், மின்சார வாகனங்கள், நுண்ணறிவார்ந்த வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனங்கள் முதலிய பசுமையான பொருட்களின் விற்பனை அதிகரிப்புடன், பசுமையான நுகர்வுச் சந்தையின் அளவு நிதானமாக விரிவாக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author