சீனாவில் வளர்ச்சி வாய்ப்புகளைத் தேடாவிடில், உலகளவில் போட்டியாற்றலை இழக்க நேரிடும் என்பது நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான இடர்பாடுகள் என்று ஜெர்மனி செய்திஊடகம் தெரிவித்துள்ளது.
சீனா 17ஆம் நாள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான பொருளாதார இயக்க நிலைமை இதற்கு தீர்வாக அமைந்தது. ஒட்டுமொத்த ரீதியில், சீனப் பொருளாதாரம் சீராக இயங்கி வருகிறது. குறிப்பிட்ட முக்கிய குறியீடுகள் தொடர்ந்து மீட்சியடைந்து, தொடர்ந்து அதிகரிக்கும் முன்னேற்றப் போக்கு நிலைநிறுத்தியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள், சீனச் சந்தையில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நம்பிக்கையும் இதன் மூலம் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன மிகப் பெரிய சந்தை உள்ளது என்பதைத் தவிரவும், இச்சந்தை தொடர்ந்து வலுவாகி வருவதே மீதான நம்பிக்கை அதிகரிப்புக்கு காரணம். நிறுவனங்களைப் பொறுத்தவரை, புத்தாக்கம் என்பது உயிராற்றல் மிக்கது. விரைவாக புத்தாக்கம் செய்துவது என்பது சீனச் சந்தையின் மற்றொரு ஈர்ப்பு ஆற்றலாகும். சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு, முன்மதிப்பீட்டை விட அதிகரித்துள்ளது.
இதற்கு, உரிய நேரத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் இன்றியமையாதது என்று தென் கொரியாவின் அஜு பிசினஸ் டெய்லி என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.
அண்மையில், சீனாவின் உயர் நிலை தலைவர்கள் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தினர். இவற்றில் பன்முக சீர்திருத்தத்தை ஆழமாக்கி, சீனத் தனி சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது வலியுறுத்தப்பட்டது.
விசா விலக்கு கொள்கையையும் சந்தை திறப்பு கொள்கையையும் விரிவாக்குவது, தடையின்றி புத்தாக்கத்தில் ஈடுபடுவது, சர்வதேச உயர் நிலை பொருளாதார வர்த்தக விதிகளுக்குப் பொருந்திய கொள்கையை விதிப்பது மற்றும் மேலும் திறப்பு கொள்கையுடனான சீனா, உலகத்திற்கு மேலதிகமான நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.