பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடும் பரீக்ஷா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) 2026 நிகழ்வு, உலகளாவிய அளவில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு இந்த நிகழ்விற்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்து, கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
ஜனவரி 8, 2026 அன்று வெளியான அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த நிகழ்விற்கான ஆர்வமும் பங்கேற்பும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு 4.13 கோடிக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர்.
இது உலகின் மிகப்பெரிய கல்வி சார்ந்த பொதுக் கலந்துரையாடல் நிகழ்வு என்ற பிரிவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
மோடியின் ‘பரீக்ஷா பே சர்ச்சா’ படைத்த பிரம்மாண்ட சாதனை; கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது
