சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் மூத்த கர்னல் சாங் சியௌகாங் 8ஆம் நாள் முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், தியோயூ தீவு மற்றும் அதனுடன் இணைந்தத் தீவுகள், பண்டைக்காலம் தொட்டு, சீனாவின் உரிமைப் பிரதேசமாகத் திகழ்கின்றது என்றும், சீனாவின் கடற் காவற்துறையினர்கள் தொடர்புடைய கடல் பரப்பில் வலம் வருவது சட்டப்பூர்வமானதும் நியாயமானதும் ஆகும் என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்தில், சீன கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள், சீனாவுக்குச் சொந்தமான கடல் பரப்பில் வலம் வந்த போது, அபாயத்தில் சிக்கியுள்ள பிலிப்பைன்ஸ் மீனவர்களை மீட்டன. சீனாவின் இச்செயலுக்கு அந்நாட்டின் மக்கள் நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால், சிலர் இது குறித்து சீனா மீது போலித்தனமான குற்றஞ்சாட்டுகளை முன்வைத்தனர். இதனையடுத்துப் பேசிய சாங் சியௌவ்காங் சீனா தனக்குச் சொந்தமான இறையாண்மையையும் கடல் நலன்களையும் எப்போதும் உறுதியாகப் பேணிக்காக்கும் என்றும் பிராந்திய நாடுகளுடன் இணைந்து, தென் சீனக் கடலை அமைதியான, நட்பார்ந்த, ஒத்துழைப்பு வாய்ந்த கடலாக உருவாக்க சீனா பாடுபடும் என்றும் கூறினார்.
