சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதிய ரகசியக் கடிதம், சீனா-இந்தியா உறவுகளில் அமைதியான ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகளாவிய வர்த்தகப் போரைத் தொடங்கப் போவதாகச் சிக்னல் கொடுத்த நேரத்தில், கடந்த மார்ச் மாதம் இந்த ரகசியக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்த ரகசியக் கடிதம் பிரதமருக்கு அனுப்பப்பட்டது.
அமெரிக்க வர்த்தக அழுத்தம் இரு நாடுகளிலும் அதிகரித்திருந்த நிலையில், உறவுகளை மேம்படுத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துவதற்காகவே சீன அதிபர் ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவருக்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா – சீனா உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு அடித்தளமிட்டது இந்த கடிதம்தானா?
