பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
அதன்படி, போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் சுமார் 1.03 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தம் 6.14 கோடி ரூபாய் ‘சாதனை ஊக்கத்தொகை’ வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதில் இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கும் தமிழகப் பேருந்து ஊழியர்களின் கடின உழைப்பைப் பாராட்டும் வகையில் இந்தத் தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் கடந்த ஆண்டில் பணிபுரிந்த நாட்களின் அடிப்படையில் 85 ரூபாய் முதல் 625 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மற்றும் போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு கிடைக்கும். அரசின் இந்த அறிவிப்பு போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
