கரூர் வேலுச்சாமி புரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரச்சாரக் கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 10 பேர் பலியாகினர்.
கரூர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே 3 குழந்தைகள் மற்றும் 7 பெரியவர்கள் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் உயிரிழப்புகள் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. திருச்சி, சேலத்தில் இருந்து கூடுதல் மருத்துவப் பணியாளர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் மயக்கமுற்றனர். அவசர சிகிச்சை பிரிவில் பல குழந்தைகள் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மயங்கி விழுந்தவர்களை போலீசார் தூக்கி சென்று காப்பாற்றிவருகின்றனர்.