சீனாவின் தைய்யுயாங் செயற்கை கோள் ஏவு மையத்தில், ஜனவரி 13ஆம் நாள் இரவு 10 மணியளவில், லாங்மார்ச்-6 ஏவூர்தியின் மூலம்,“யாவுகான் 50 01”எனும் தொலை உணர்வறிச் செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு, தடையின்றி திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்துள்ளது. இந்த முறை ஏவுதல் கடமை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
தேசிய நில ஆராய்ச்சி, விளைந்த பயிர்களின் உற்பத்தி அளவு மீதான முன்மதிப்பீடு, பேரழிவு அபாய குறைப்பு முதலிய துறைகளில் இச்செயற்கைகோள் பயன்படுத்தப்படும்.
இந்த கடமை, லாங்மார்ச் ஏவூர்தித் தொகுதியின் 624வது வெற்றிகரமான பறத்தல் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது, 2026ஆம் ஆண்டில் முதலாவது ஏவு கடமையும் ஆகும்.
