செயற்கை நுண்ணறிவு குறித்த சீன-அமெரிக்க அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையின் முதல் கூட்டத்தை, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மே 14ஆம் நாள் இரு நாடுகளும் இணைந்த நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சான் பிரான்சிஸ்கோ சந்திப்பின்போது உருவாக்கிய ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் விதம், இரு தரப்புகளுக்கிடையே ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டது போல இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் அபாயங்கள், உலகளாவிய மேலாண்மை, இரு தரப்புகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.