உள்ளூர் நேரப்படி மே 8ஆம் நாள் நண்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெல்கிரேட் நகரில் செர்பிய அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வூசிச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தார்.
அப்போது தானும், செர்பிய அரசுத் தலைவர் வுசிச்சியும், சீன-செர்பிய உறவு மற்றும் இரு தரப்புப் பொது அக்கறை கொண்ட விவகாரங்கள் குறித்து ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, பல புதிய முக்கிய ஒத்தக் கருத்துகளை உருவாக்கியுள்ளோம் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.
பின்னர் இருதரப்பும் ஒப்புக்கொண்ட ஒத்தக் கருத்துகளை அவர் அறிமுகப்படுத்தினார். முதலாவதாக, புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்கி, இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தைத் திறத்து வைத்தல், இரண்டாவதாக, நெடுநோக்குத் தொடர்புகளின் மூலம், புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்கு வழிகாட்டல், மூன்றாவதாக, பல ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, சீன-செர்பிய ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றிக்குப் புதிய இயக்காற்றலை ஊட்டுதல், நான்காவதாக, போக்குவரத்து, எரியாற்றல் அடிப்படைக் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, புத்தாக்க ஒத்துழைப்புகளை, இரு தரப்புறவின் புதிய அதிகரிப்பு ஆற்றலாக உருவாக்குதல் ஆகிய துறைகள் ஒத்துழைப்பை மேற்கொள்ள இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
மேலும், புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்கு சீனா அளிக்கும் முதல் 6 ஆதரவு நடவடிக்கைகளை ஷி ச்சின்பிங் அறிவித்தார். அதில்,
முதலாவதாக, இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், சீன-செர்பியத் தாராள வர்த்தக உடன்படிக்கை ஜூலை முதல் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
இரண்டாவதாக, 2027ஆம் ஆண்டு சிறப்பான உலகப் பொருட்காட்சியைச் செர்பியா ஏற்று நடத்துவதற்குச் சீனா ஆதரவளிக்கும்.
மூன்றாவதாக, செர்பியாவின் தரமிக்க வேளாண் பொருட்களுக்கான இறக்குமதியை சீனா விரிவுபடுத்தும்.
நான்காவதாக, அடுத்த 3 ஆண்டுகளுக்குள், செர்பியாவைச் சேர்ந்த 50 இளம் அறிவியலாளர்கள் சீனாவில் ஆய்வுப் பரிமாற்றம் மேற்கொள்வதற்குச் சீனா ஆதரவளிக்கும்.
ஐந்தாவதாக, அடுத்த 3 ஆண்டுகளுக்குள், சீனாவில் கல்வி பயணம் மேற்கொள்ளும் பொருட்டு 300 செர்பிய இளைஞர்களுக்குச் சீனா அழைப்பு விடுக்கும்.
ஆறாவதாக, பெல்கிரேட் நகருக்கும் ஷாங்காய் மாநகருக்கும் இடையிலான நேரடி விமானச் சேவையைச் செர்பியா திறந்து வைப்பதைச் சீனா வரவேற்கும் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றன.