சீன வணிகத் துறை சம்மேளனம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் ஜனவரி திங்கள், சில்லறை விற்பனைத் துறையின் செழிப்பு குறியீடு தெளிவாக மீட்சியடைந்து வருகிறது. நுகர்வு சந்தையின் மீதான சில்லறை விற்பனைத் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை நிதானமாக அதிகரித்து வருகின்றது.
புதிய தரவுகளின்படி, ஜனவரியில், சீனாவின் சில்லறை விற்பனை துறையின் செழிப்பு குறியீடு 51.1 விழுக்காட்டை எட்டி, கடந்த ஆண்டின் டிசம்பர் திங்களில் இருந்ததை விட 0.7 சதவீதப் புள்ளியும், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.2 சதவீதப் புள்ளியும் அதிகரித்துள்ளது.
மேலும், வசந்த விழாவுக்கான பொருட்களின் நுகர்வு, வீட்டு பயன்பாட்டு மின்சாரக் கருவிகள் உள்ளிட்ட பொருட்களுக்கான “பழைய விற்றிக்கு புதியவை” கொள்கை உள்ளிட்ட காரணங்களாக, மாவட்டச் சந்தைகளில் நுகர்வு மேலும் முன்னேற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.