சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதித் தொகை 45 இலட்சத்து 47 ஆயிரம் கோடி யுவானுடன், 3.8 விழுக்காடு அதிகரித்து, உலகளவில் சரக்கு வர்த்தக துறை தொடர்ந்து முதலிடத்தில் பிடித்தது.
இதில் உயர் அறிவியல் தொழில் நுட்பத்தின் ஏற்றுமதி தொகை 5 இலட்சத்து 25 ஆயிரம் கோடி யுவானாக, 13.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இயந்திர மின் உற்பத்தி பொருட்களின் மதிப்பு 7 இலட்சத்து 41 ஆயிரம் கோடி யுவானாக, 5.7 விழுக்காடு அதிகரித்தது.
240க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் சீனா வர்த்தகம் செய்கின்றது. 190க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களுடனான ஏற்றுமதி இறக்குமதித் தொகை அதிகரித்துள்ளது.
சீனாவில் ஏற்றுமதி இறக்குமதி பதிவு கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 80 ஆயிரமாகும். இதில் தனியார் நிறுவனங்களின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை நாட்டின் மொத்த அளவில் 57.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
