“ஈரானுக்கு விரைந்த அமெரிக்க போர் கப்பல்”… வெடிக்கும் 3-ம் உலகப் போர்…!?! 

Estimated read time 1 min read

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டம், தற்போது ஈரான் – அமெரிக்கா இடையேயான நேரடிப் போர் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. “எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது முழு அளவிலான போராகக் கருதப்பட்டு கடும் பதிலடி கொடுக்கப்படும்” என்று அமெரிக்காவிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டு அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தை ஒடுக்க அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளால் வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் ஈரான் ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்” என எச்சரித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘ஆர்மடா’ கடற்படை ஈரானை நோக்கிச் செல்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தலுக்கு ஈரான் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளது. இது குறித்து ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்:

“அமெரிக்கா நடத்தும் தாக்குதல் சிறிய அளவிலானது (Limited) அல்லது துல்லியமானது (Precision) என அவர்கள் எப்படி அழைத்தாலும் சரி, அதனை நாங்கள் முழு அளவிலான போராகவே கருதுவோம். ஈரானைத் தாக்கினால் எங்களிடம் உள்ள அனைத்து பலத்தையும் பயன்படுத்திச் சாத்தியமான மிகக் கடுமையான பதிலடியைக் கொடுப்போம். எந்தவொரு மோசமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள எங்கள் ராணுவம் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.”

இதேபோல் ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்கள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்க, ஈரான் தனது தாக்குதல் பொத்தானில் விரலை வைத்துள்ளது என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ராணுவக் குவிப்பு உண்மையான போருக்காக இருக்காது என ஈரான் நம்பினாலும், எதற்கும் தயாராகவே இருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளதால் உலக நாடுகள் கவலையடைந்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author