இன்று உலக சினிமாவாகவே இருந்தாலும் கூட அதற்கான வணிகமும் அதன் தரத்தை முடிவு செய்வதாக இருக்கிறது. இந்த இடத்தில் பல படைப்பாளிகள் சமரசம் என்கிற சிறைக்குள் சிக்கிவிடாமல், சுயாதீனமாக படங்களை எடுத்து வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் சிறந்த படைப்புகளைக் கொடுத்து விடுகிறார்கள்.
இன்னும் சிலர் வணிகக் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டே சிறந்த படங்களைத் தந்துவிடுகிறார்கள். எப்படியிருப்பினும் ஒரு திரைப்படம் திரைப் பாடம் ஆகும்போதுதான், அதன் மேன்மை காலம் கடந்தும் வாழ்க்கைக்கு உதவுகிறது.
அப்படிப்பட்ட சிறந்த படங்களைத்தான் நூலாசிரியர் நமக்கு முற்றிலும் புதிய பார்வையுடன் அறிமுகப்படுத்துகிறார். இந்நூலின் ஆசிரியர் டாக்டர் ஆர்.கார்த்திகேயனை மனித வள மேம்பாட்டுப் பயிற்சித் துறையில் அறியாதவர்கள் குறைவு.
பன்முக ஆளுமையான இவர், சிறந்த எழுத்தாளரும் கூட. இந்து தமிழ் திசை இணைப்பிதழ்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற பல தொடர்களை எழுதியவர். தனது பயிற்சிப் பட்டறைகளில் சிறந்த திரைப் படைப்புகளை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துபவர்.
இந்து தமிழ் நாளிதழின் வெள்ளிக் கிழமை சினிமா இணைப்பிதழான இந்து டாக்கீஸில் இவர் எழுதிய ‘திரைப் பாடம்’ என்கிற தொடர், பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று.
இத்தொடரில், ஆங்கிலம், இத்தாலி, ஜப்பானியம் என பல அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் வெளியான 31 சிறந்த திரைப்படங்களைக் குறித்த தனது அட்டகாசமான, ஆழமான பார்வையைச் சுவைப்படப் பரிமாறியிருக்கிறார்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு மகிழ்ச்சியான [மேலும்…]
தலைநகர் சென்னையில் தங்கிப் பணிபுரியும் மற்றும் பயிலும் இளைஞர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், மே 5-ம் தேதி முதல் விடுதிகளின் (PG) கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு [மேலும்…]
தமிழகத்தில் கோடைக் காலத்தின் உச்சக்கட்ட வெயில் தகிக்கும் காலமே ‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்திரி வெயில்’ என அழைக்கப்படுகிறது. 2026ம் ஆண்டில், அக்னி நட்சத்திரம் [மேலும்…]
சென்னை பெருநகரில் வாக்கு எண்ணும் நாளன்று சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு [மேலும்…]
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தேவூர் பேரூராட்சி த.வெ.க துணை செயலாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை [மேலும்…]
பரபரப்பான வணிக வீதியில் மழையில் நனைந்தபடி ஸ்கூட்டரைத் தள்ளிச் சென்ற இளைஞர், அறுந்து கிடந்த மின்கம்பியைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். [மேலும்…]