சீன-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை சீனாவும் அமெரிக்காவும் நீண்டகாலத்திற்கு நீட்டிப்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் டிசம்பர் 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் முதல் இந்த உடன்படிக்கை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஒன்றுக்கொன்று நன்மை அளித்து கூட்டாக வெற்றி பெறுவது, சீன-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பின் சாராம்சம் ஆகும். இரு தரப்புகளுக்கிடையேயான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கு இந்த உடன்படிக்கை வலுவான ஆதரவு அளித்துள்ளது.
இந்த உடன்படிக்கையை நீட்டிப்பது, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பில் எட்டப்பட்ட முக்கிய ஒத்த கருத்தைச் செயல்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். இது இரு நாட்டு மக்களின் நலன்களுக்கும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது.
சீனாவுடன் இணைந்து, இந்த உடன்படிக்கையை பயன்தரும் முறையில் செயல்படுத்தி, இரு நாட்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பின் சாதனைகளை இரு நாடுகளுக்கும் உலகத்துக்கும் நன்மை பயக்கச் செய்ய வேண்டும் என சீனா விரும்புவதாக தெரிவித்தார்.