ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா தமிழிசை சௌந்தராஜன்?

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும், தெலுங்கானா ஆளுநர் பதவியையும் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து ‘தந்தி டிவி’ யில் வெளியான ட்வீட்டின் படி, அவர் இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக தலைமை, தன்னை நாடுளுமன்ற தேர்தலில் போட்டியிட கூறினால், தயங்காமல் போட்டியிட தயார் என கூறி இருந்தார்.
இதற்கிடையே, இரண்டு கட்ட போட்டியாளர்கள் பட்டியலை பாஜக ஏற்கனவே அறிவித்து விட்டது.
அதில் தென்மாநிலங்களின் போட்டியாளர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த சூழலில் தான் தமிழிசையின் ராஜினாமா தகவல் பரவி வருகிறது.
அதன்படி, தமிழிசை, தமிழகம் அல்லது புதுச்சேரியில் போட்டியிடலாம் என யூகிக்கப்படுகிறது.

You May Also Like

More From Author