மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை 

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர், முதன்முறையாக மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகள் கடுமையாக சிதைந்துள்ளன.
அணு ஆயுதப் போரின் அபாயங்கள் குறித்து புதின் அடிக்கடி எச்சரிப்பது வழக்கம், ஆனால் உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் பேசிய பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், வருங்காலத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக தனது நாட்டு படைகளை அனுப்பக்கூடும் என்று கூறினார்.

பல மேற்கத்திய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. கிழக்கு ஐரோப்ப நாடுகள் மட்டும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

You May Also Like

More From Author