வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான ராணுவ மோதல் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
தென் ஈரானிய பகுதிகளில் அமெரிக்க படைகள் நடத்திய 5 மணி நேர வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் 5-வது கடற்படைப் பிரிவு மற்றும் விமானத் தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவ இலக்குகளுக்கு எதிராகத் தங்களின் இரண்டாவது கட்டப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் குண்டுமழை
