2024 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு  

2024ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மைக்ரோஆர்என்ஏ மீதான அவர்களின் அற்புதமான பணிக்காகவும், போஸ்ட் டிரான்ஸ்கிரிப்ஷனல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கிற்காகவும் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

இருவரின் ஆராய்ச்சி பல்வேறு செல் வகைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. இது மைக்ரோஆர்என்ஏ கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது.
அம்ப்ரோஸ் மற்றும் ருவ்குன் ஆகியோர் மைக்ரோஆர்என்ஏவை கண்டுபிடித்தனர்.

இது மரபணு ஒழுங்குமுறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய ஆர்என்ஏ மூலக்கூறுகளின் ஒரு புதிய வகையாகும்.
அவர்களின் ஆராய்ச்சி மனிதர்கள் உட்பட பலசெல்லுலர் உயிரினங்களுக்கு அவசியமான மரபணு ஒழுங்குமுறையின் முற்றிலும் புதிய கொள்கையை வெளிப்படுத்தியது.

Please follow and like us:

You May Also Like

More From Author