
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து அதிரடியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதற்காக முதற்கட்டமாக ₹300 கோடியை முன்பணமாக ஒதுக்கி முதல்வர் விஜய் அவர்கள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதற்கான உற்பத்தி பணிகள் ஒருபுறம் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு சிறப்பான தகவலும் வெளியாகியுள்ளது.
கடந்த 2026 பொங்கல் பண்டிகையின் போது விநியோகம் செய்யப்படாமல் ரேஷன் கடைகளில் எஞ்சியிருந்த வேட்டி மற்றும் சேலைகளை, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளுக்குப் (OAP பயனாளர்கள்) சிறப்புப் பரிசாக வழங்க முதல்வர் விஜய் அவர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கான விநியோகப் பணிகளை ரேஷன் கடைகள் மூலமாக உடனடியாகத் தொடங்குவதற்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய ஆடைகளை வீணாக்காமல் தகுதியான முதியோர்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டு சேர்க்கும் அரசின் இந்த அதிரடி முடிவு தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
