ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் வியட்நாமில் பயணம்

Estimated read time 1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரின் சிறப்பு தூதரும், மத்தியக் கமிட்டியின் சர்வதேச தொடர்பு துறை அமைச்சருமான லியூஹெய்சிங் ஜனவரி 29, 30ஆம் நாட்களில் வியட்நாமில் பயணம் மேற்கொண்டார். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 14ஆவது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதையும் டுலாம் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளராகப் பதவியேற்றதையும் குறித்து அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

டுலாமுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வாழ்த்து செய்தியை அவர் தெரிவித்தார். வியட்நாம் உடன் இணைந்து, இரு கட்சிகளின் அதியுயர் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துக்களை உணர்வுபூர்வமாக நடைமுறைப்படுத்தி சீன-வியட்நாம் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தில் புதிய மாபெரும் வளர்ச்சி காண்பதை முன்னேற்றச் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author