சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஷிச்சின்பிங்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு 30ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி, சீன அரசவை, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, உச்ச நீதி மன்றம், உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றம் ஆகியவற்றின் கட்சிக் குழுப் பணியறிக்கைகள் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் பணியறிக்கையை அரசியல் குழு நிரந்தர கமிட்டி கேட்டறிந்து ஆய்வு செய்தப் பின் வழங்கிய அறிக்கை இக்கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டது.

You May Also Like

More From Author