2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டின் சீனத் தேசிய பொருளாதாரம் பற்றிய நிலைமையை சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் ஏப்ரல் 16ஆம் நாள் வெளியிட்டது.
முதற்கட்ட கணக்கீட்டின்படி, முதலாது காலாண்டில், சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 33 லட்சத்து 41 ஆயிரத்து 930 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.0 விழுக்காடு அதிகமாகும். தொழில் வாரியாகப் பார்க்கும் போது, முதன்மைத் தொழில், இரண்டாம் நிலைத் தொழில் மற்றும் மூன்றாம் நிலைத் தொழிலின் உற்பத்தி மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 3.8, 4.9 மற்றும் 5.2 விழுக்காடு அதிகரித்துள்ளன.
