2025 சர்வதேச அடிப்படை அறிவியல் மாநாடு 13ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. அடிப்படை அறிவியல் மனிதகுலத்தின் எதிர்காலத்தை வழிநடத்தும் என்பது இம்மாநாட்டின் தலைப்பாகும். 4 ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்றவர்கள், 3 நோபல் பரிசு பெற்றவர்கள் உள்ளிட்ட சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் நிபுணர்களும் அறிஞர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். கணிதம், இயற்பியல், தகவல் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளின் முன்னணி வளர்ச்சி குறித்து கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டு அடிப்படை அறிவியலின் எதிர்காலம் பற்றி விவாதித்தனர்.
அடுத்து வரும் 2 வாரங்களில், 500க்கும் அதிகமான கூட்டங்கள் நடைபெறும். புகழ் பெற்ற பல அறிவியலாளர்கள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது புதிய சாதனைகளை வெளியிடவுள்ளனர்.