சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவன் அம்மையார் மக்கெள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.
மக்கெளவின் வரலாற்றுப் போக்கு, சீன மற்றும் மேலை நாட்டு நாகரிகங்கள் ஒன்றிணைந்த கட்டிடக் கலை, தொழில் மற்றும் பண்பாடுகள் முதலியவை குறித்து அவர் ஆழமாக அறிந்து கொண்டு, உள்ளூர் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகளுடன் உரையாடினார்.