பிலிப்பைன்ஸின் அவதூற்றுக்கு சீனா எதிர்ப்பு

 

சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங்பின் ஜனவரி 29ஆம் நாள் கூறுகையில், அரசுரிமை மற்றும் அமைதியைப் பேணிக்காப்பவர்களான சீனக் கடற்படையினர்களும், கடற் காவற்துறையினர்களும், கடல் பகுதி மற்றும் எல்லையைப் பாதுகாக்கும் கடமையை தொடர்ந்து உறுதியாக நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார்.

முன்னதாக ஜனவரி 23ஆம் நாள், ஒரு பிலிப்பைன்ஸ் சரக்குக் கப்பல் ஹுவாங்யான் தீவுக்கு அருகிலான கடற்பரப்பில் மூழ்கி விப்பத்துக்குள்ளானது. சீனக் கடற் காவற்துறையினர்கள், 17 பிலிப்பைன்ஸ் கடற்பணியாளர்களை மீட்டெடுத்தனர். மீட்கப்பட்ட இக்கடற்பணியாளர்களைச் சீனா 25 ஆம் நாள் ஃபிலிப்பைன்ஸிடம் ஒப்படைத்தது. ஆனால், பிலிப்பைன்ஸ் சீனாவுக்கு நன்றி தெரிவிக்காததோடு, “கப்பல்களை அச்சுறுத்தி, தடை செய்தது” என்று சீனாவின் மீது அவதூறு கூறியுள்ளது.

இது குறித்து ஜியாங்பின் கூறுகையில், பிலிப்பைன்ஸின் தொடர்புடைய செய்தித் தொடர்பாளர் இந்த மனித நேய நற்செயலைப் பயன்படுத்தி தீய நோக்கத்துடன் பரப்புரை செய்தது வெட்கக் கேடானது என்று தெரிவித்தார்.

 

 

You May Also Like

More From Author