ரஜினி படத்தில் இணைந்த மஞ்சுமேல் பாய்ஸ் நடிகர்  

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.
இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் களமிறக்க பட்டுள்ளனர் என செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், இன்று படக்குழுவினரின் அறிமுகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் முதல் கேரக்டராக இன்று அறிமுகம் ஆனவர் சௌபின் ஷாஹிர்.
இவர் மஞ்சுமேல் பாய்ஸ் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர். இவர் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

இவரை தவிர, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் மற்றும் மஹேந்திரன் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author