சீன-அமெரிக்க உறவுக்கு மனித தொடர்பு பரிமாற்றம் துணை

ஜனவரி 28ம் நாள் அமெரிக்க ஃபிலடெல்ஃபியா நகரில் 2026ம் ஆண்டு “மகிழ்ச்சியான வசந்த விழா” இசை நிகழ்ச்சி மற்றும் “வணக்கம் சீனா” சுற்றுலா பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்காவுக்கான சீனத் தூதர் ஷேய் ஃபாங் மனித தொடர்பு பரிமாற்றத்தைப் பாலமாகக் கொண்டு, புதிய யுகத்தில், இரு நாடுகளுக்கிடையில் சரியான அனுகுமுறையை அமைப்பதற்குப் பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.

மேலும் இரு நாட்டு மக்கள், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்குரிய ஜன்னலைத் திறக்க, அமெரிக்காவின் மேலதிக உயர்நிலை கலைக் குழுக்கள், சீனாவில் நிகழ்ச்சிகளை வழங்குவதைச் சீனா வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், சீனாவின் சிறந்த அரங்கேற்ற கலைக் குழுக்கள், அமெரிக்க பார்வையாளர்களுக்குக் கலை விருந்தை வழங்குவதையும் சீனா ஆதரிக்கிறது என்றும் ஷேய் ஃபாங் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author