ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப் போட்டியை லார்ட்ஸ் மைதானம் நடத்தும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உறுதிப்படுத்தியுள்ளது. இது ஜூலை 5 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, மகளிர் கிரிக்கெட்டுக்கு மற்றொரு மைல்கல்லாக அமைகிறது, ஏனெனில் இந்த போட்டி 12 அணிகளையும் மொத்தம் 33 போட்டிகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட உள்ளது.
2026 ஜூன் 12 ஆம் தேதி போட்டி இந்த உலகக்கோப்பை தொடர் தொடங்கும், இங்கிலாந்தின் லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட், ஹெடிங்லி, எட்ஜ்பாஸ்டன், தி ஓவல், ஹாம்ப்ஷயர் பவுல் மற்றும் பிரிஸ்டல் கவுண்டி மைதானம் என ஏழு புகழ்பெற்ற இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.
2026 மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி லார்ட்ஸில் நடைபெறும் என அறிவிப்பு
