பட்ஜெட் 2026: 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அறிவிப்புகள்  

Estimated read time 1 min read

இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நாட்டின் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியை இணைக்கும் வகையில் 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இவை வெறும் ரயில் பாதைகள் மட்டுமல்ல, நகரங்களை இணைக்கும் வளர்ச்சி இணைப்புகளாக செயல்படும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் வேகமான பயணத்தை உறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ள அந்த 7 வழித்தடங்கள் மும்பை – புனே, ஹைதராபாத் – பெங்களூரு, டெல்லி – வாரணாசி, வாரணாசி – சிலிகுரி, புனே – ஹைதராபாத், ஹைதராபாத் – சென்னை, சென்னை – பெங்களூரு ஆகும்.
இந்தத் திட்டங்கள் பெரிய நகரங்களை வளர்ந்து வரும் தொழில் மையங்களுடன் இணைத்து, பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author