ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் மூலம், கூகுள் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
இதன் மூலம், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஜியோ பயனர்களுக்கு ₹35,000 மதிப்புள்ள கூகுளின் ஜெமினி ப்ரோ ஏஐ சேவையை 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
அக்டோபர் 30 அன்று தொடங்கியுள்ள இந்தக் கால வரம்புக்குட்பட்ட சலுகை, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) விரைவாகப் பரவலாக்கும் நோக்கில், ரிலையன்ஸ் – கூகுள் இடையேயான விரிவான கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும்.
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் நிறுவனமும் அறிவார்ந்த கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கவும், புதுமைப்படுத்தவும், வளரவும் முடியும் வகையில், இந்தியாவை ஏஐ மூலம் மேம்படுத்துவதே இந்தக் கூட்டணியின் நோக்கம் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
ஜியோ பயனர்களுக்கு ரூ.35,000 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ ஏஐ 18 மாதங்களுக்கு இலவசம்
