விராலிமலையில் உள்ள முருகன் கோயிலில் அலைமோதிய மக்கள் வெள்ளம்! – காவடி சுமந்து ஆடிய எம்.எல்.ஏ!

Estimated read time 0 min read

தைப்பூச விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள முருகன் கோயிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

புகழ் பெற்ற இந்த கோயிலில் தைப்பூசத்திற்கான கொடியேற்றம் கடந்த வாரம் பக்தர்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாரதனைகளும் காட்டப்பட்டன. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 4 மாட வீதிகளின் வழியாக நடைபெற்றது.

முன்னதாக சுவாமிக்கும், வள்ளி தெய்வானை தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சமேதராக காட்சியளித்த சுவாமியை பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காவடி சுமந்து ஆடிய எம்.எல்.ஏ!

இதனைத்தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகப் பெருமானை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் பாதயாத்திரையை, கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் காவடி சுமந்து பரவசத்துடன் தொடங்கி வைத்தார்.எம்.எல்.ஏ காவடி சுமந்து ஆடியதைக் கண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்

You May Also Like

More From Author