திபெத்தியல் சுயேச்சையான அறிவியல் முறையின் உருவாக்கத்தை சீனாவின் திபெத்தியல் துறையினர் மேலும் முன்னேற்றுவர் என்று ஜுலை 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற 7ஆவது சீனத் திபெத்தியல் பணி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய யுகத்தில் திபெத்தியல் வளர்ச்சியின் நிலைமை பற்றி இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் போது, ஹான்-திபெத் புதிய சொற்கள் மற்றும் வார்த்தைகள் அகராதி (2012-2024) எனும் புதிய நூலின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. திபெத் இன மொழியைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் புதிய சொற்கள் மற்றும் வார்த்தைகள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.