சீன ஊடகக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் கூட்டம் 4ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இக்கலை நிகழ்ச்சியின் படைப்பு மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு, நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், மேடையின் வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்து இதில் வெளியிடப்பட்டன.
உலகளாவிய சீனர்கள் மற்றும் வெளிநாட்டு நண்பர்களுக்கு சிந்தையைத் தூண்டுகின்ற கலை மற்றும் பொழுதுபோக்கு தன்மை வாய்ந்த நிகழ்ச்சியை சீன ஊடக குழுமம் மாபெரும் முயற்சியுடன் வடிவமைத்து, புதிய அறிவியல் தொழில் நுட்பம் நிறைந்த வசந்த விழா கலை நிகழ்ச்சியைத் தயாரிக்கப் பாடுபட்டுள்ளது.
சி.ஜி.டி.என் நிறுவனம் தனது 85 வகை மொழிகள் சேவை மூலம், உலகின் சுமார் 200க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3300 ஊடகங்களுடன் இணைந்து, இவ்வாண்டின் வசந்த விழா கலை நிகழ்ச்சியை நேரடி ஒலிபரப்பு செய்து தொடர்புடைய செய்திகளை வெளியிட உள்ளது.
