சீனச் சந்தையின் நுகர்வோர்கள் எப்போதும் புதிய ரக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சூழலைப் பொறுத்தவரை, சீனச் சந்தை பெரும் உள்ளட்டக்கத் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் சேவை வர்த்தகத்துக்கான 2025ஆம் ஆண்டு சீனச் சர்வதேசப் பொருட்காட்சியின் போது, உலகின் புகழ் பெற்ற வாகனப் பாகங்களின் விநியோக நிறுவனமான ஜெர்மனி இசட்எஃப் குழுமத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி வாங்ரென்யி பேட்டியளித்த போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சீனாவை எங்களது உடற்பயிற்சி மையமாக நாங்கள் விவரிக்கிறோம். சீனாவில் மிக வலிமையாக வளர்ந்தால் தான், போட்டி ஆற்றல் மிக்கதாக மாற முடியும். அதற்குப் பின்பு, எதிர்காலத்தில் ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவிலும் போட்டியாற்றலாக மாற முடியும் என்றார்.