2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் உடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆகஸ்டு 30ஆம் நாள் பிற்பகல் சந்தித்து பேசினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், பலதரப்புவாதம் மற்றும் ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு, உலகளாவிய இன்னல்களைச் சமாளிப்பதற்கான சரியான வழிமுறையாகும். ஐ.நாவுடன் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சர்வதேச விஷயங்களில் ஐ.நாவின் மைய பங்கிற்கு ஆதரவு அளித்து, உலக அமைதியைப் பேணிக்காப்பதற்கும் வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னேற்றுவதற்கும் பங்காற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், சீனாவின் புதிய வளர்ச்சியின் மூலம், உலகத்துக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கி, மனித குலத்தின் பொது எதிர்காலத்தின் உருவாக்கம், மூன்று உலக முன்மொழிவுகளின் நடைமுறையாக்கம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு நாடுகளுடன் மேலும் இனிமையான எதிர்காலத்தை உருவாக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
குட்ரேஸ் கூறுகையில், உலக மேலாண்மை அமைப்புமுறையின் சீர்திருத்தம், செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்றத்துக்கான சமாளிப்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.