நாளை மறுநாள் மலேசியா செல்லும் பிரதமர் மோடி..!

Estimated read time 1 min read

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

பிரதமர் மோடி, மலேசியாவுக்கு மேற்கொள்ளும் 3வது பயணம் இது. 2024-ஆகஸ்டில் இந்தியா- மலேசியா இடையிலான இருதரப்பு உறவில் வலுவான நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு மோடி மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைகிறது.இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் உயர்மட்டப் பேச்சு நடத்த உள்ளார்.

இதில் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் குறித்து ஆலோசிக்கப்படும்.பயணத்தின் ஒரு பகுதியாக 10-வது இந்தியா–மலேசியா தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் இரு நாட்டு தொழில் அதிபர்களும் பங்கேற்பார்கள்.மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தினர்,

வணிகப் பிரதிநிதிகளுடனும் மோடி உரையாற்ற உள்ளார்.பிரதமர் மோடியின் பயணமானது,ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் மிக முக்கியக் கட்டமாகக் பார்க்கப்படுகிறது.இவ்வாறு வெளியுறவு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author