அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதுவர்கள், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு புதிய சமாதான ஒப்பந்தம் குறித்த பதிலை அளிப்பதற்கு சில நாட்களே அவகாசம் அளித்து அவசர காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சமாதானத் திட்டத்தின்படி, உக்ரைன் தனது சில நிலப்பரப்பு இழப்புகளை (குறிப்பாக தென்கிழக்குப் பகுதிகளில்) ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
இதற்கு பதிலாக, அமெரிக்காவிடம் இருந்து குறிப்பிடப்படாத பாதுகாப்பு உத்தரவாதங்கள் உக்ரைனுக்குக் கிடைக்கும்.
டிரம்ப் இந்த ஒப்பந்தம் கிறிஸ்துமஸ்ஸுக்குள் முடிவடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
ட்ரம்ப் பரிந்துரைத்த போர் சமாதான திட்டத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு காலக்கெடு
