அமெரிக்காவில் மருந்துகளை குறைந்த விலையில் பெற புதிய ‘TrumpRx’ தளம் தொடக்கம்  

Estimated read time 1 min read

அமெரிக்காவில் மருந்துப் பொருட்களின் விலையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘TrumpRx’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார்.
Pfizer, AstraZeneca உள்ளிட்ட முன்னணி மருந்து நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பல அத்தியாவசிய மருந்துகளுக்கு கணிசமான தள்ளுபடி விலையை இந்த தளம் வழங்குகிறது.
காப்பீடு இல்லாதவர்கள் மற்றும் ரொக்க விலையில் மருந்து வாங்குபவர்களுக்கு இது உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்வில் இந்த தளம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

You May Also Like

More From Author