2 தொகுதிகளில் இடைத்தேர்தல்- வேட்பாளர்கள் யார் தெரியுமா?

Estimated read time 0 min read

2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் யார் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய் ஏற்கனவே திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா, கரூர் தொகுதி எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

7 தொகுதிகள் காலியாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யபாமாவும் தவெக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவியை ராஜினாமா செய்தபோதே இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மறுபுறம்,அதிமுகவும், திமுகவும் இந்த இரு தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை களமிறக்க தயாராகி வருகிறது.

You May Also Like

More From Author