கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மறைமுக தொழில்நுட்ப பேச்சுவார்த்தை புதன்கிழமையன்று நிறைவடைந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையை செயல்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன.
எனினும், பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.
ஈரானிய தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி, இந்த சுற்று பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் முக்கிய நகர்வாக, அமெரிக்காவால் முடக்கப்பட்டிருந்த ஈரானின் 6 பில்லியன் டாலர் நிதியின் ஒரு பகுதி, ஈரானின் உள்நாட்டுத் தேவைகளுக்காக பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் ரகசிய பேச்சுவார்த்தை நிறைவு
