சீன வெளியுறவு அமைச்சகம் 2026 புத்தாண்டு விருந்தளித்தல்

சீன வெளியுறவு அமைச்சகம் 5ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில்  2026 புத்தாண்டுக்கான விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில் சீனாவுக்கான பல்வேறு நாடுகளின் தூதர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரிநிதிகள், சீனாவின் தொடர்புடைய வாரியங்களின் பணியாளர்கள் உள்ளிட்ட 500 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அவர்களின் தலைமையில், 2025ஆம் ஆண்டில், சீனாவின் தூதாண்மை நியானமான, நீதியான பாதையில் நடைபோட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச நீதி மற்றும் நேர்மையைப் பேணிக்காக்கும் சீனாவின் நிலைப்பாடு எப்போதும் மாறப்போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், மனித குலத்தின் பொதுச் சமூக உருவாக்கத்தை விரைவுபடுத்தும் சீனாவின் மனவுறுதி மாறாது என்றும் கூறினார்.

அதோடு, உலகளவில் அனைத்து முன்னேற்ற ஆற்றல்களுடனும் இணைந்து, மேலதிகமான அருமையான உலகத்தை உருவாக்குவதற்குப் புதிய பங்காற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

You May Also Like

More From Author