கடந்த சில ஆண்டுகளில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு புதிய முன்னேற்றம் அடைந்து வருகிறது.
இதில் சரக்கு வர்த்தக அளவு தொடர்ந்து விரிவாகி வருகிறது என்று சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவுக்கும் இவ்வமைப்பின் இதர உறுப்பு நாடுகளுக்குமிடையேயான சரக்கு வர்த்தகத் தொகை, 24 ஆயிரத்து 770 கோடி அமெரிக்க டாலரை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இவ்வமைப்பின் இதர நாடுகளுக்கு இயந்திர மின் உற்பத்தி பொருட்கள், வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள், ஆடைகள், வேதியியல் பொருட்கள் ஆகியவற்றை சீனா அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது. இவ்வமைப்பின் இதர நாடுகளிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, விவசாயப் பொருட்கள், நிலக்கரி, தாது பொருட்கள் உள்ளிட்டவற்றை சீனா அதிகமாக இறக்குமதி செய்துள்ளது.
சீனாவுக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இதர நாடுகளுக்குமிடையிலான வர்த்தக தொகை, 2024ஆம் ஆண்டில் 51 ஆயிரத்து 240 கோடி அமெரிக்க டாலரை எட்டி, 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 2.7 விழுக்காடு அதிகமாகி, வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.