வெனிசுலாவுக்கு அவசர மனிதநேய உதவி வழங்கி வரும் சீனா

 

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் 26ஆம் நாள் கூறுகையில், வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடும் உயிரிழப்புகளும் சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா வெனிசுலா அரசிற்கும் மக்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துள்ளது. இதற்கு வெனிசுலா தனது நன்றியைத் தெரிவித்துள்ளது என்றார். மேலும், சீன அரசும் சீனாவின் செஞ்சிலுவைச் சங்கமும் வெனிசுலாவுக்கு அவசர மனிதநேய உதவிகளை வழங்கியுள்ளன என்றும், பேரழிவின் நிலையின்படி வெனிசுலாவுக்கு மேலும் ஆதரவளிக்க சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author