கூகுள் மற்றும் ChatGPT-க்கு சவால் விடும் இந்தியாவின் ‘ சர்வம் ஏஐ’!  

Estimated read time 1 min read

இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, பெங்களூருவை சேர்ந்த ‘Sarvam AI’ நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய ஏஐ மாதிரிகள், சில குறிப்பிட்ட சோதனைகளில் கூகுள் மற்றும் ChatGPT போன்ற உலகளாவிய ஜாம்பவான்களை விட சிறப்பாக செயல்பட்டு வியக்க வைத்துள்ளது.
2023-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இந்திய சூழலுக்கு ஏற்றவாறு மிக குறைந்த இணைய வசதியிலும், சாதாரண கைபேசிகளிலும் இயங்கும் வகையில் தனது தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது.
டாக்டர் விவேக் ராகவன் மற்றும் டாக்டர் பிரத்யுஷ் குமார் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இந்தியாவின் உள்ளூர் மொழிகளுக்கான குரல் மற்றும் மொழி மாதிரிகளை (Voice and Language Models) உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
இவர்களது தயாரிப்புகள் குறிப்பாக தொலைபேசி அழைப்பு அமைப்புகள் மற்றும் உள்ளூர் மொழி பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author