அரிசி உற்பத்தியில் சீனாவிடம் இருந்து முதலிடத்தைப் பறித்து இந்தியா சாதனை  

Estimated read time 0 min read

உலகிலேயே அதிக அளவு அரிசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா இந்தச் சாதனையைப் படைத்துள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 4, 2026 அன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி இந்தியாவின் உற்பத்தி 150.18 மில்லியன் டன் ஆகும்.
அதே நேரத்தில் சீனாவின் உற்பத்தி 145.28 மில்லியன் டன் மட்டுமே இருந்தது.
உணவு தானியப் பற்றாக்குறையை எதிர்கொண்ட ஒரு காலத்தில் இருந்து, இன்று உலகிற்கே உணவளிக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
நாட்டின் மொத்த உணவு தானிய இருப்பும் தற்போது திருப்திகரமான அளவில் உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author