15வது ஐந்தாண்டுத் திட்டவரைவில் 20 முக்கிய இலக்குகள்

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் மார்ச் 5ஆம் நாள் முற்பகல், 14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடரில், அரசுப் பணியறிக்கையை வழங்கினார்.

சீனத் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15வது ஐந்தாண்டுத் திட்டவரைவில், பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கத்தின் மூலம் முன்னேற்றம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன்கள், பசுமையான மற்றும் கார்பன் குறைந்த வளர்ச்சி உள்ளிட்ட 20 துறைகள் குறித்து 20 முக்கிய இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், முழு சமூகத்திலும் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு 7 விழுக்காட்டுக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கான கரியமில வாயு வெளியேற்ற அளவு 17 விழுக்காட்டைக் குறைக்க வேண்டும் என்றும் இந்த அரசுப் பணியறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

You May Also Like

More From Author